இது சந்தையா…..? அல்லது சாக்கடையா…???

கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு சில பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் இருப்பதாக மக்களும் வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனைக்கு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் இன்று நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளமை சுட்டத்தக்கது.

கிளிநொச்சி சந்தையின் பழக்கடைத் தொகுதிக்கும், மரக்கறிக்கடை தொகுதிக்கும் இடையே உள்ள பகுதி மிகவும் மோசமான சுகாதார சீர்கேடுகள் நிறைந்து வழிந்து வருகின்றது.

இது குறித்து கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை.மாதாந்தம் 1240 ரூபாய் ஒவ்வொரு வர்த்தகர்களிடமிருந்தும் அறவிடுகின்றனர். ஆனால், அதற்குரிய சேவை இடம்பெறுவதில்லை என சந்தை வர்த்தகர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்விடயம் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிக்கு கொங்றீட் இட்டு நிரந்தரமான தீர்வை கொடுக்க இருப்பதாகவும் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதனிடம் கூறியதாக தெரிவிகப்படுகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி