தீர்வு இல்லையேல் ஏற்படப் போகும் பாரிய விளைவுகள்! எரிமலை மீது மைத்திரி

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பாரதூரமான நிலை எல்லை மீறிச் செல்வதாக புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர்.

ஜனாதிபதி பொறுப்பட்ட வகையில் எரிமலை மீது நடத்து செல்வதாகவும், விரைவில் மலை வெடித்து முழு நாடும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமகாலத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மஹிந்தவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை உத்தரவு காரணமாக அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கூட்டு நிதியில் இருந்து அரச செலவினங்களும் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 152ஆம் சரத்திற்கமைய அரசாங்க செலவுகளை செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.

அமைச்சரவை இல்லை என்றாலும் நாட்டின் செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி கூறி வருகின்றார். எனினும் அவர் எரிமலை மீது நடந்து கொண்டிருக்கின்றார் என்பதை அவருக்கு நெருக்கமான ஆலோசர்கள் அறிவுறுத்தவில்லை என்பதை தற்போதைய நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.

ஜனவரி மாதம் இந்த எரிமலை வெடிக்கும் எனவும், அவ்வாறு வெடித்தால் அது ஜனாதிபதிக்கு மாத்திரமின்றி முழு இலங்கைக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

சிலர், கூட்டு நிதியை ஜனாதிபதியினால் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்ற போதிலும் அரசியலமைப்பிற்கமைய அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு தான் நினைத்தது போது கூட்டு நிதியில் இருந்து பணம் செலவிடும் அதிகாரம் இல்லை. அவருக்கு சில செலவுகளை ஏற்பதற்கு 2 சந்தர்ப்பங்களில் மாத்திரமே முடியும்.

அது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், இதற்கு மேலதிகமான 151ஆம் சரத்திற்கமைய அவசர நிலைமைகளில் மாத்திரமே பயன்படுத்த முடியும். எனினும் அந்த நடவடிக்கை நிதி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் அவசர நிலைமை ஒன்று நாட்டில் இல்லை.

இதுவரை அமைச்சரவையின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய டிசம்பர் மாதம் இறுதிக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒன்று நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அப்படி செய்யவில்லை என்றால் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கும் அரசாங்கத்தின் அனைத்து செலவுகளுக்கும் நிதி ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் ஜனாதிபதியின் உணவிற்கேனும் செலவிடுவதற்கு அரசாங்கத்தில் பணம் பெற முடியாமல போய்விடும்.

இந்த நடவடிக்கை நீடித்தால் இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முழு நாட்டை பாரிய ஆபத்தில் கொண்டு போய்விடும் என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி