வவுனியாவில் உள்ள கடை ஒன்றில் திடீர் அனர்த்தம்!

வவுனியாவில் மின்சார விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த மின்சார உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துளனர்.

இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த மின்சார உபகரணங்கள் எரிந்துள்ளபோதும் தீக்கிரையாகிய பொருட்களின் விபரங்கள் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வவுனியா தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி