திருமணத்திற்கு பின்னர் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா

அண்மையில், சினிமாப் பிரபல்யங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இருவரும் நீண்ட காலமாக காதலித்து திருமணம்  செய்திருந்தனர்.

நட்சத்திர காதல் ஜோடியின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது உலகம் அறிந்தது.

இந்தத் திருமணத்துக்காக இலங்கை ரூபா பெறுமதிக்கு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் செலவில் நகைகளை தீபிகா கொள்வனவு செய்திருந்தார்.

இத்தாலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோடிக்கணக்கான செலவில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவைதவிர பெங்களூர், மும்பையில் போன்ற இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமணம் காரணமாக, சுமார் ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பிலிருந்து தீபிகா ஓய்வு எடுத்திருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், அமெரிக்க இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்கு படுகவர்ச்சியாக தீபிகா படுகோன் போஸ்
கொடுத்த புகைப்படம் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

நீச்சல் உடை அணிந்திருக்கும் தீபிகாவுக்கு சிகை அலங்கார நிபுணர் ஒருவர் ஹேர் ஸ்டைல் செய்யும் புகைப்படம் வைரலாகி உள்ளது.

இதில் இருந்து தெரியவருவது என்னவென்றால், திருமணத்துக்கு பின்னரும் தீபிகா கவர்ச்சியாக நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி