வெள்ளத்தில் மூழ்கியுள்ள அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி! அதிர்ச்சியில் மக்கள்

அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மிக நீண்ட காலமாக புணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ்வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால் அவ்வீதியின் ஊடான பயணம் செய்பவர்கள் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவ்வீதியால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி ஒருவர் வெள்ளத்திற்குள் மறைந்திருந்த வீதியின் குழியில் மாட்டி விபத்துக்குள்ளாகியிருந்தார்.

மேலும் வழி இலக்கம் 751,766,767 ஆகிய பயணிகள் பேருந்துக்களும் ஆபத்தான நிலையில் அவ்வீதியுடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றது.

தொண்டைமானாறு துருசு புணரமைப்பின் போது அமைக்கப்பட்ட மண் மேடு உரிய முறையில் அகற்றப்படாதமையினாலேயே அங்கு தேங்குகின்ற நீர் வழிந்தோடமுடியாத நிலை காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி