தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவம் வீதிக்கு வரவேண்டும் ; வடக்கில் ஆர்ப்பாட்டம்

 வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்று கோரி பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினாலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோசம் முன்வைக்கப்பட்டது.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி