குடித்து விட்டு வீதியில் செல்வோருக்கு தகாத வார்த்தை பேசிய நபருக்கு சிறை

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு வீதியால் செல்வோருக்கு தகாத வார்த்தைகளினால் பேசிய நபருக்கு சிறைதண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

காசிம் நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் குச்சவெளி நகரில் மதுபானம் அருந்திவிட்டு வீதியில் செல்வோருக்கு தகாத வார்த்தைகளினால் ஏசுவதாக பொதுமக்கள் பொலிஸ் அவசரப்பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறைதண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி