அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டி யாழ்.மரியன்னை பேராலயத்தில் சிறப்பு ஆராதனை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு அமைதி ஏற்படவேண்டி யாழ்ப்பாணம், மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றுள்ளது.

இந்த ஆராதனை இன்று (டிசம்பர் 06) முற்பகல் 10 மணிக்கு அமலமரி தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தலைமையில் ஆரம்பமானது.

“நாட்டில் மக்களை வழிப்படுத்த வேண்டிய அரசியல் தலைவர்கள் தமது சுய நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

மனிதர்களுடன் பேச்சு நடத்தி இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வைக் காண்பது இயலாத காரியம். அதனால் தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான எல்லாம் வல்ல இறைவனிடம் தான் அமைதி வேண்டிப் பிரார்திக்க வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு நீதித்துறை பக்கச்சார்பின்றி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிநிற்கின்றோம்” என்று ஆராதனை உரையில் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தெரிவித்தார்.

நாட்டில் அமைதி வேண்டி கத்தோலிக்க திருத்தச்சபையின் மறை மாவட்டங்கள் அனைத்திலும் இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணிவரை இந்த நற்கருணை ஆராதனை இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி