கனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்!

கனடாவில் இரு தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரொரன்ரோவில் ஆண் மற்றும் பெண் இருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் அவர்கள் மறுவாழ்வு பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என நீதிபதி கூறியுள்ளார்.

மிதுஷா பூபாலசிங்கம் மற்றும் ஜீவன் நாகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் Halifax என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் பிள்ளைகளின் உணவு பைகள், மற்றும் துணிகளில் வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சித்தமை தொடர்பில் மொன்றியல் பகுதி பொலிஸ்அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் 22 வயதாக இருந்த மிதுஷா, ஓபியம் என்ற போதைப்பொருளை இறக்குமதி செய்வதில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி Nova Scotia மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி Elizabeth Buckle தீர்ப்பை வெளியிட்டிருந்தார்.

நீதிபதியின் தீர்ப்பிற்கமைய, மிதுஷாவின் வயது, அப்பாவித்தனம் மற்றும் இதற்கு முன்னர் குற்றவியல் பதிவுகள் இல்லாததால், அவரது தண்டனையை குறைப்பதற்கு நீதிபதி தீர்மானித்தார்.

இதேவேளை, இந்த கடத்தல் நடவடிக்கையில் ஜீவனின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், அந்த செயற்பாட்டினால் அவரது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய போதைப்பொருள் கடத்தலுக்கு தண்டனை குறைக்கப்பட்டு மிதுஷாவுக்கு 5 வருடங்களும் ஜீவனுக்கு 2 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி