மூன்று வயதுச் சிறுவனை கடும் குளிரிலிருந்து 2நாட்கள் பாதுகாத்த மனிதாபிமானக் கரடி!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் காட்டுப் பகுதியில் காணாமல் போன மூன்று வயதுச் சிறுவனை கரடி ஒன்று இரண்டு நாட்களாக கடும் குளிர் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் உலக மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது!

குறித்த பகுதியைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் தனது பாட்டியின் வீட்டில் ஏனைய நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து போலிசாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது, தகவல் அறிந்த போலிசார் 100 காவலர்கள், டிறோன்ஸ், ஹெலிஹொப்டர் மற்றும் மோப்ப நாய்கள் என இரண்டு நாட்களாக பல தரப்பினரும் சிறுவனைத் தேடும் பணியில் கடுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்த சிறுவனின் தாயார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு ஓர் காட்டுப் பகுதியில் சிறுவனின் அழுகைக் குரல் கேட்பதாக தாயார் கூறியதைத் தொடர்ந்து போலிசாரும் அதனை உறுதி செய்து அப்பகுதி முழுவதும் தேடலை ஆரம்பித்தனர். அங்கு காணப்பட்ட கடும் குளிர் மற்றும் மழை என்பன சிறுவனைப் பாதிக்கலாம் என்ற நோக்கில் வெப்பக்காற்று பரவச் செய்யப்பட்டதுடன் சிறுவன் வெற்றிகரமாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.

சிறுவனின் உடல் நலம் சற்றும் குறையவில்லை என்றும் ஒரு சில கீறல்கள் மட்டுமே உள்ளதாகவும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இதில் உள்ள சுவாரஷ்யம் என்னவென்றால், தன்னை இரண்டு நாட்களாகத் கரடி ஒன்று கட்டி அணைத்து பாதுகாத்து வைத்திருந்ததாகவும் தான் கூக்குரலிட்டுக் கொண்டிருந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்திருக்கின்றான். இச் செய்தி அறிந்த உலக மக்கள் குறித்த கரடியின் மனிதாபிமாகத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி