தேசியக் கொடியை கீழே விழாமல் காத்த தோனி! குவியும் பாராட்டுக்கள்!!

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த 3வது டி20 போட்டியின் இடையே தோனி, இந்திய தேசியக் கொடி கீழே விழாமல் பாதுகாத்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. தோனி எப்போதும் அமைதியானவர், தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக கிரிக்கெட் அனுபவம் மற்றும் அறிவு கொண்டவர். அதே சமயம், நாட்டுப் பற்றும் கொண்டவர் என்பதை பறை சாற்றும் விதமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. அப்போது இடைவேளையில் இந்திய ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வந்தார். அவர் கைகளில் இந்திய மூவர்ணக் கொடி இருந்தது.

அவர் நேராக விக்கெட் கீப்பிங் செய்ய காத்திருந்த தோனி அருகே சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அந்த நேரத்தில் அந்த ரசிகர் கையில் இருந்த தேசியக் கொடி கீழே விழ இருந்தது. அதை கவனித்தார் தோனி.

உடனே, அதை அவர் கைகளில் இருந்து பறித்துக் கொண்டார். ஒரு வேளை தோனி அதை தேசியக் கொடியை பறிக்காமல் விட்டிருந்தால், அது அவரது கால்களில் பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. இதை முன் யோசனையுடன் கணித்து தோனி சமயோசிதமாக செயல்பட்டார்.

தோனி இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், விக்கெட் கீப்பிங்கில் அசத்தினார். அதிரடியாக ஆடி வந்த நியூசிலாந்து வீரர் செய்ஃபர்ட்டின் விக்கெட்டை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டம்பிங் செய்து ஆச்சரியம் அளித்தார்.

தோனி ரசிகர்கள் தோனி பேட்டிங்கில் கை விட்டாலும், தேசியக் கொடிக்கு இழுக்கு ஏற்படாமல் காப்பாற்றியதை பாராட்டி வருகின்றனர். ஒருவர் தோனி லெப்டினன்ட் கலோனல் ஆக இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தோனி எப்போதும் விழிப்பாக இருப்பார். அது ஸ்டம்ப்புக்கு பின்னே ஆக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் ஒருவர்.

எப்போதும் தோனி நம்மை பெருமைப்படுத்தி வருகிறார் என்கிறார் இந்த ரசிகர்.

Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி