குளியலறையில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!


ஐக்கிய அரபு நாட்டில் இலங்கை பெண்ணின் குளியலறையில் இரகசிய கமரா வைத்த நபர் ஒருவர் சிக்கியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

Al Rashidiya பகுதியில் உள்ள வீட்டினை தனது நண்பருடன் குறித்த இலங்கை பெண் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது குளியலறையில் திடீரென கையடக்க தொலைபேசி வெளிச்சம் வெளியானதை கண்ட யுவதி கூச்சலிட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது கையடக்க தொலைபேசியில் யுவதியை படம் பிடிக்கும் வகையில் கமரா பொருத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் தனது வீட்டை பகிர்ந்த இலங்கையரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்த போது, அதில் நிர்வாண புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் குறித்த நபர் நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி