எக்சைனோஸ் சிப்செட் உடன் உருவாகும் சாம்சங் டேப்லெட்

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய கேலக்ஸி
டேப்லெட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. புதிய டேப்லெட் SM-P205 என்ற மாடல் நம்பரில் உருவாகி வருகிறது.

சமீப காலங்களில் புதிய டேப்லெட் பற்றி விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் புதிய கேலக்ஸி டேப்லெட் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. கீக்பென்ச் மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 சிப்செட், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

இத்துடன் புதிய டேப்லெட் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இது பிளாக் மற்றும் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் தளத்தின் சிங்கிள் கோரில் 1329 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 4150 புள்ளிகளை பெற்றிருந்தது.தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி டேப்லெட்களுக்கு SM-P205 என்ற மாடல் நம்பர் பொருந்தவில்லை என்பதால், புதிய சாதனத்தின் அறிமுகம் பற்றி எவ்வித தகவலும் இல்லை. கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருப்பதாக சாம்சங் புதிய டேப்லெட் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

புதிய கேலக்ஸி டேப்லெட் பற்றி இதுவரை அதிகப்படியான விவரங்கள் வெளியாகவில்லை என்பதால், கேலக்ஸி அன்பேக்டு விழாவில் இந்த டேப்லெட் அறிமுகமாகாது என்றே கூறப்படுகிறது. சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி