மாறுவேடத்தில் மேகன் : ரகசியமாக எங்கு சென்றார் தெரியுமா?

கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸ் போல உடையணிந்து தன்னை மறைத்துக் கொண்டு பிரித்தானிய இளவரசி மேகன் நியூயார்க்கில் காணப்படும் புகைப்படங்கள்  இப்படி மாறுவேடத்தில், ரகசியமாக மேகன் எதற்காக நியூயார்க் சென்றார்? மேகனின் நெருங்கிய தோழிகள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு திட்டமிட்டிருக்கின்றனர்.

அதற்காகவே திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக மேகன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமெரிக்கா சென்றுள்ளார்.

தனது மிக நெருங்கிய தோழியும் ஆடை வடிவமைப்பாளருமான Jessica Mulroneyயும் அவரது மற்ற தோழிகளும் சேர்ந்து திட்டமிட்டுள்ள அந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்காகவே மேகன் நியூயார்க் வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். துப்பறியும் நிபுணர்கள் போல கோட்டும் தொப்பியும் அணிந்து கொண்டு தனது நீண்ட கூந்தலால் முகத்தை மறைத்துக் கொண்டாலும், அவரது கையில் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் மேகனை நன்றாகவே காட்டிக் கொடுக்கிறது.

அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், மேகனின் நெருங்கிய தோழிகளான செரீனா வில்லியம்ஸ், சாரா மற்றும் இந்திய நடிகையும் மேகனுக்கு மிகவும் நெருங்கிய தோழியுமான பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேகனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி