போர்த்து-லா-சப்பலில் வெடிகுண்டு!

போத்து-லா-சப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரைச் சேத்ந்த வெடிகுண்டு ஒன்றினால் தொடர் குழப்பம் நீடிக்கிறது.

SNCFக்கு சொந்தமான கட்டிடப்பணி ஒன்று போர்த்து-லா-சப்பலில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இங்கு, இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 500 கிலோ கொண்ட அந்த வெடிகுண்டு, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செயலிழக்க செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிய, மீண்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை செயலிக்க வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதி, குறித்த பகுதியில் இருந்து 1000 பேர்வரை வெளியேற்றப்பட உள்ளனர். A1 நெடுஞ்சாலை, அங்கு அதை ஒட்டி வசிக்கும் அகதிகள் என பலர் வெளியேற்றப்பட உள்ளதோடு, போக்குவரத்தும் தடை செய்யப்படும் எனவும், சில தொடரூந்து மற்றும் மெற்றோ நிலையங்களும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி