பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவன்! காரணம் வெளியானது

பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவரே பாடசாலை சீருடையுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

“அவர் வழமை போல் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலை அதிபர் அன்றைய தினம் காலை குறித்த மாணவரை அழைத்து உடனடியாக வீட்டிற்கு சென்று உரிய முறையில் முக சவரம் செய்து விட்டு பாடசாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,வீட்டுக்கு சென்ற குறித்த மாணவன் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்றார்.

இந்த நிலையில் அவர் மணல் காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் அன்றைய தினம் இரவே சடலமாக மீட்கப்பட்டார்.

சக மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் மாணவனை அழைத்து கூறியமையினால் மனமுடைந்து குறித்த முடிவை எடுத்திருக்கலாம்” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அந்த மாணவர் பல் துறைகளிலும் ஆற்றல் மிக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி