தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா? அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் அப்போது தலைமை நிர்வாகி கூகுள் பிச்சை உயரதிகாரிகள் யாருக்கும், சக ஊழியர்களுடன் பாலியல் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் பணியாற்ற முடியாது.
கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கிய 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மிக மூத்த நிர்வாகிகள் என்று கூறிய அவர், நான் இன்னமும் உங்கள் பாஸ், வாக்கெடுப்பு நடத்தி நிறுவனம் நடத்த முடியாது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சுந்தர் பொறுப்பேற்றப்பின் கூகுள் நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதா? சுந்தர் எத்தகைய தலைவர்? என்பது குறித்து கூகுளில் பணிப்புரியும் ஊழியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில் சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவிதம் பேர் கூறியுள்ளனர்.
ஆனால், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவிதம் குறைவாகும். எதிர்காலத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். இந்த மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவு ஆகும்.
இதனால் சுந்தர் பிச்சையின் மதிப்பு கூகுள் ஊழியர்களிடம் குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்தில் எழுந்த பாலியல் புகாரும், அதற்கான அவரின் நடவடிக்கைகளும் தான் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Home
News
World News
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா? அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்