கந்தளாயில் கேரள கஞ்சா ?

#Kanthalay
திருகோணமலை கந்தளாய் பகுதியில் 1500 மில்லி கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபரொருவரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா இன்று உத்தரவிட்டார்.

கந்தளாய், ஆரியவங்ச மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக கந்தளாய் தலைமையக போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரை சோதனை மேற்கொண்ட போதே 1500 மில்லி கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி