Breaking

Saturday, September 14, 2019

முதியவருக்கு முளைத்த பேய்க்கொம்பு.. காரணம் இது தானாம்..!

மத்திய பிரதேச மாநிலத்தும் 74 வயது முதியவருக்கு திடீரென்று தலையில் கொம்பு முளைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராகி பகுதியைச் சேர்ந்தவர் சியாம் லால் யாதவ்.

74 வயதாகும் சியாமிற்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தலையில் சிறியதாக கொம்பு ஒன்று முளைத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாத சியாம் அதை உடைத்துக் கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் இந்த கொம்பானது பெரிதாக முளைக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பதற்றமடைந்த சியாம் மருத்துவரை அனுகி இது குறித்து சோதனை செய்துள்ளார்.

தலையில் கொம்பு முளைப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் இதை ஆய்வு செய்தனர்.

மருத்துவர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 74 வயதாகும்க் சியாமிற்கு பேய்க்கொம்பு(செபசீகஸ்) என்ற அரிய நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த பேய் கொம்பு நோய் குறித்து அமெரிக்காவில் முன்னர் ஒரு ஆய்வு நடந்துள்ளது. அதில் அவர்கள் இந்த வியாதி சிலருக்கு அதுவும் நேரடியாகச் சூரிய வெளிச்சம் தோல் பகுதியில் படும் போது ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இது கை, கால், தலை என உடலில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போது சியாம் லாலிற்கு தலையில் ஏற்பட்டுள்ளது. இந்த வியாதி தான் எனவும், அது தலையில் கோர்ட்டின் அதிகமாகச் சுரப்பதால் அது ஒரே இடத்தில் குவிந்து கொம்பாக வளர்வதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளது.