Breaking

Sunday, September 15, 2019

அமெரிக்காவையே அதிர வைத்த தமிழன் உணவு! விஞ்ஞானிகளே வாயடைத்து போன ஆச்சரியம்

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் பண்டைய உணவினை வைத்து ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அது மாத்திரம் அல்ல, தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... கடவுளாகதான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

காரணம் என்னவென்றால் தமிழனின் பண்டைய உணவான பழைய சோறு தான். ஆராய்ச்சியில் பழைய சோற்றில் என்னென்ன சக்திகள் இருக்கிறது என்று கூறியிருக்கின்றார்கள். அவற்றை பார்க்கும் போது தமிழர்களே வாயடைத்து போய்விட்டனர்.

பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன.
இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.
முக்கியமாக பழைய சோaற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
பழைய சோற்றில் நார்ச்சaத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது.
ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.
குறிப்பு
நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும் காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள் ஆரோக்கியம் என்று கூறினால் அதை மறுக்கும் நாம், வெளிநாட்டினர் ஆராய்ந்து, ஆச்சரியப்பட்டு கூறினால் உடனே ஒப்புக் கொள்வோம்.

இப்போது நம் பழைய சோற்றை அவர்கள் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள். இப்போதாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பழைய சோற்றினை தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ளுங்கள்.