Breaking

Saturday, December 21, 2019

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 31 வயது நபர் கைது!



திருச்சியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பக்கத்து வீட்டுக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர் நேற்று குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவரின் வீட்டின் அருகே, லோகநாதன் - கவிதா என்ற தம்பதியினரின் 4 வயது மகள் உள்ளார். நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை சங்கர் பார்த்துள்ளார். பின்னர் சிறுமியை  சங்கர்  வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பக்கத்து வீட்டு காரர்தானே என்று நம்பி சென்ற சிறுமிக்கு சங்கர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது. இதையடுத்து சங்கர் மீது அரியமங்கலம் காவல் நிலையம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அரியமங்கலம் போலீஸார், தப்பி ஓடிய சங்கரை பிடித்து போக்சோ சட்டத்தின் இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டுகாரரே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.