Breaking

Tuesday, March 17, 2020

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

அடுத்த சில நாட்களில் நாட்டின் தெற்குப் பகுதியில் மழையுடனான காலநிலை நிலவக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பொலனறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மழையுடனான காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.