Breaking

Thursday, April 30, 2020

கொரோனா - புதிய விளக்கம் கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்க்கு 10லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கூட, அதிகம் பரிசோதனை செய்வதே காரணம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுவரை அந்நாட்டில் 60ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களே அதிக இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளிக்கும் விளக்கங்களும், புது புது ஐடியாக்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது புதிய விளக்கம் ஒன்றை டிரம்ப் கொடுத்துள்ளார். அதில், அமெரிக்க மற்ற நாடுகளை விட அதிக அளவில் பரிசோதனைகளை செய்வதாகவும் அதனால்தான் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும், மற்ற நாடுகள் பரிசோதனையில் பின் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment