Breaking

Wednesday, April 22, 2020

கொழும்பிலிருந்து லொறியில் தப்பி வந்த யாழ். நபர்

#Jaffna #Colombo #Corona Virus
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர் லொறியில் யாழ்ப்பாணத்துக்கு வந்து மறைந்து வாழ்ந்துள்ளார்.

இதையறிந்த வலி. மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், இவ்வாறு ஒழித்து அங்கிருந்து வந்தவரை உடனடியாக தேடிப் பிடித்த , அவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றி வந்த லொறியிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார். லொறிச் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.