Breaking

Thursday, April 30, 2020

ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மாந்தை கிழக்கு மக்களுக்கு உதவிய “சிவனருள் இல்லம்”.

முல்லைத்தீவு , மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த தற்போதைய அசாதாரண நிலைமையால் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 55 குடும்பங்களுக்கு  வியாழக்கிழமை(02) மன்னார் “சிவனருள் இல்லம்” ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மேற்படி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நட்டாங்கண்டல் – எருவில், பொன்னகர், பூவரசங்குளம், விநாயகபுரம், கரும்புள்ளியான், பாலிநகர், வடகாடு, வன்னிவிளாங்குளம், பாலைப்பாணி, செல்வபுரம், பாண்டியன்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 55 குடும்பங்களைச்சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மேற்படி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 17 அங்கத்தவர்களைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , வயது முதிர்ந்த குடும்பங்கள், தினக் கூலிகள், வறுமையிலுள்ளவர்கள் மற்றும் தூரவிடங்களிலுள்ள குடும்பத் தலைவர் இங்கு வந்து போக முடியாது தவிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இந்த உதவிகள் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பாண்டியன் குளம் சிவயோக சுவாமிகள் அறநெறிப் பாடசாலைச் சமூகம் மேற்படி உதவி வழங்கல் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்ததுடன் மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் மாந்தை கிழக்குப் பிரதேச சபை வாகன உதவி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment