Breaking

Sunday, April 26, 2020

நெடுந்தீவில் பெருமளவு இறால் அறுவடை: அமைச்சர் டக்ளஸ் கருத்திட்டத்திற்கு வெ ற்றி – அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த மக்கள்!


 


நெடுந்தீவு பிரதேசத்தில் பெருளவு இறால் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள வெட்டக்களி உட்பட்ட பருவ கால நீர்நிலைகளிலேயே பெருமளவு இறால்களை அறுவடை செய்யக் கூடியதாக இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய சுமார் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் நெடுந்தீவு வெட்டக்களி உட்பட்ட சில குளங்களில் விடப்பட்டன.



நக்டா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த நவம்பர் மாதமளவில் குறித்த இறால் குஞ்சுகள் நீர் நிலைகளில் விடப்பட்ட நிலையில் சித்திரை, வைகாசி மாதங்களில் சுமார் 7200 கிலோகிராம் இறால்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வறுமையில் சிக்கியிருந்த தமக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி பேருதவியாக இருப்பதாக நெடுந்தீவு மக்கள் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.

இறால் வளர்ப்புக்கு உகந்த வடக்கில் வளமான அனைத்து இடங்களிலும் இறால் குஞ்சுகளை வளரச்செய்வதன் ஊடாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது பொருளாதாரத் உயர்த்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென்ற தூரநோக்கு திட்டத்திற்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வடக்கிலுள்ள நிலையான நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டு பல இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.

அவ்வாறு நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியில் விடப்பட்ட சுமார் 6 லட்சம் இறால் குஞ்சுகள் தற்போது வளர்ந்துள்ளதால் அங்கு மக்கள் இறால் அறுவடையை ஆரம்பித்துள்ளார்கள்

நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியில் மட்டும் சுமார் 1500 கிலோ இறால் மக்களால் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய கொராணா அச்சமும் தொடர்ச்சியான ஊரடங்கும் காரணமாக வறுமையில் பட்டினியை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தீர்க்க தரிசனமான நெடுந்தீவில் இறால் வளர்ப்பு நடவடிக்கையானது பேருதவியாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.



இதுபோன்ற இறால் வளர்ப்பு முயற்சியானது நெடுந்தீவு மக்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.