Breaking

Wednesday, April 29, 2020

அமிதாப்பச்சன் வெளியிட்ட 'பிகினி' புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் பல முன்னணி நடிகைகள் கிளாமர் புகைப்படங்கள், பிகினி புகைப்படங்கள் என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது பாலோயர்களை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

'பிகினி' புகைப்படங்கள் குறித்து அமிதாப்பச்சன் ஒரு கருத்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்ஸ்டாகிராமில் நான் ஏன் இளம் தலைமுறையினரைப் போல, அதிகமான பாலோயர்களைப் பெறவில்லை என ஒருவர் என்னிடம் காரணம் சொன்னார். நான் பிகினி புகைப்படங்களை பதிவிடுவதில்லை என்பதுதான் காரணமாம்.

அதனால், இந்த புகைப்படத்தைப் பதிவிடுகிறேன். இது ஒரு உண்மையான பிகினி புகைப்படமல்ல. என்னுடைய 'மகான்' படத்தில் இடம் பெற்ற ஒரு புகைப்படம். அப்படம் வெளிவந்து இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது,” என சுவாரசியமாகப் பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment