Breaking

Tuesday, May 19, 2020

முகப்புத்தக பதிவால் யாழில் 28 வயது இளம் குடும்பஸ்தர் வீதியில் தூக்கில் தொங்கி மரணம்.

யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கிய படி இருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செம்மணிப் பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.

கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.

குறித்த நபர் சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரின் மரணம் தற்கொலையா, கொலையா என்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறித்த நபர் தொடர்பில் நேற்று முன்தினம் பேஸ்புக் ஒன்றில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்பட ஆதாரங்களும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பேஸ்புக்கில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment