Breaking

Friday, May 1, 2020

கொரோனா தொற்றிலிருந்து தப்பிய 33 நாடுகள் எவை தெரியுமா?

உலகளவில் 33 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டபோதிலும் 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஏப்ரல் 20. 2020 நிலவரப்படி ஐ.நா அங்கீகரித்துள்ள 247 நாடுகளில் 214 நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

214 நாடுகளில் குறைந்தபட்சம் 166 நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ளன.

வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகாத நிலையில் கொரோனா தொடர்பான தகவல்களை வடகொரியா ரகசியமாக வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடுகள், பிரதேசங்கள் பின்வருமாறு...

ஐரோப்பா - ஆலண்ட் தீவுகள், ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன் தீவுகள்
ஆசியா - வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்
ஆபிரிக்கா - பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி, கொமொரோஸ், பிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள், லெசோதோசெயிண்ட், ஹெலினா
ஓசியானியா (பசுபிக் கடல்) - அமெரிக்கன் சமோவா, கிறிஸ்துமஸ் தீவு, கோகோஸ் (கீலிங்) தீவுகள், குக் தீவுகள், ஹாட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள், கிரிபாடி மார்ல் தீவுகள், மைக்ரோனேஷியா (கூட்டாட்சி நாடுகள்), நௌரு, நியு, நோர்போக் தீவு, பலாவ், பிட்காயிர்ன், சமோவா, சாலமன் தீவுகள், டோக்கலாவ், டோங்கா, துவாலு, யுனைடெட் ஸ்டேட்ஸ் மைனர், அவுட்லைடிங் தீவுகள், வானுட்டு, வாலிஸ், மற்றும் புட்டுனா தீவுகள்.
இவை தவிர கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் எந்தவொரு உயிரிழப்பும் இல்லாமல் அங்குவிலா, கிரீன்லேண்ட், செயிண்ட்பர்தலோமி, செயிண்ட்லூசியா, ஏமன் உள்ளிட்ட 5 நாடுகளில் அனைவரும் குணமடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஏமன் நாட்டில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment