Breaking

Friday, May 1, 2020

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது

ஸ்ரீலங்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் நேற்று மட்டும் 16 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி,

16 பேரில் 9 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் 6 பேருக்கு நேற்று தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மற்றுமொருவர் நாரஹேன்பிட்டி-தபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த 16 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment