Breaking

Sunday, May 10, 2020

தங்களுடைய மனைவிகளுக்கும் தற்கொலைப் பயிற்சியளித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று  நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தற்கொலை செய்து கொண்டவர்கள், தங்களுடைய மனைவிகளுக்கும் ஏனைய சில பெண்களுக்கும் பயிற்சியளித்துள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், காத்தான்குடி  பிரதேசத்தில் நடத்தி வந்த பெண்களுக்கான பயிற்சி முகாம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

சியாத் கார்டன் என்றழைக்கப்படும் ஹோட்டலே இவ்வாறு கண்டறியப்பட்டது. ஹோட்டல் உரிமையாளர், அந்த ஹோட்டலை இதற்கு முன்னர் சொந்தமாக வைத்திருந்தவர், உள்ளிட்டோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டோரின் மனைவிகள் மற்றும் இன்னும் சில பெண்கள், இவ்வாறு இங்கு வந்து போதனை வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக  தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment