Breaking

Friday, May 8, 2020

தமிழர்களின் தீர்வு இவர்களால் மட்டுமே சாத்தியம் !

நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரே என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அத்துடன் ராஜபக்சக்கள் நினைத்தால் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்க முடியும் கூறிய சஜித் ஆனால், அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வெறும் வாக்குறுதிகளைத்தான் வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் அவர்கள் தாம் வழங்கும் வாக்குறுதிகளை ஒருபோதும் அவர்கள் நிறைவேற்றவே மாட்டார்கள் என்றும், இது கடந்த கால வரலாறாக இருப்பினும் அதுவே இனியும் தொடருமெனவும் சஜித் தெரிவித்தார்.

அலரி மாளிகைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, புதிய அரசமைப்பு மற்றும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் பல வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளபோதும் ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மறந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார் .

அத்துடன் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் ராஜபக்சக்கள் நிறைவேற்றியதாக வராலேறு இல்லை குறிப்பிட்ட அவர், நல்லாட்சி அரசின் காலத்தில் தாம் அரசியல் தீர்வு விடயம், அரசியல் கைதிகளை முழுமையாக விடுவித்தல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் தவிர்த்து ஏனைய பிரச்சினைகளைத் தீர்த்துவைத்ததாகவும் கூறினார்.

மேலும் ராஜபக்சவினரும் இனவாதிகளும் குழப்பியடிக்காவிட்டிருந்தால் புதிய அரசமைப்பு நிறைவேறியிருக்கும் என்றும், அரசியல் கைதிகள் அனைவரும் சிறைகளிலிருந்து வெளியே வந்திருப்பார்கள் எனவும் சஜித் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமது கூட்டணி நாடாளுமன்றத்தில் ஆட்சிக்கு வந்தால் கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு இனவாதிகளினதும் ராஜபக்சக்களினதும் வாய்களுக்குப் பூட்டுப்போட்டு மூவின மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதுடன் சமரவுரிமையிலான தீர்வையும் வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment