Breaking

Saturday, May 9, 2020

விடுதலைப் புலிகளின் தேவைக்காக கூட்டமைப்பு தோற்றம் பெறவில்லை : எம்.ஏ.சுமந்திரன்

என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

“சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை. தற்போது கூட்டமைப்பில் மூன்று கட்சிகளே உள்ளன காலத்துக்கு காலம் சில கட்சிகள் வருவார்கள் போவார்கள்.

கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் எந்தவித எண்ணமும் இல்லை. இரா.சம்பந்தனே கூட்டமைப்பின் உண்மையான தலைவர். கூட்டமைப்பை நிர்வகிப்பது அவர் மாத்திரமே என்பதை தெளிவாக கூறுகின்றேன். என்னை கூட்டமைப்பின் தலைவர் என கூறுவதை நிராகரிக்கின்றேன்.

இலங்கையில் அனைத்து இன மக்களும் எந்தவித பாகுபாடும் இன்றி வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம், மாறாக நான் இனவாதியல்ல.

தற்போது வரையில் எனது அரசியல் தலைவர் சம்பந்தன் மாத்திரமே. ஆரம்பத்தில் ஜே.வி.பியோடு இணைந்து செயற்பட்டேன் என்பதற்காக தற்போது எனது தலைவர்

அநுரகுமார திசாநாயக்க என கூற முடியாது.

நான் சகல கட்சிகளுடனும் இணைந்து செயற்படத் தயார். அரசியல் கைதிகளில் பலரை விடுவிக்க நான் செயற்பட்டுள்ளேன். காணி விடுவிப்பில் எனது பங்கும் உண்டு இது மக்களுக்கு தெரியும்.

புலம் பெயர் தமிழர்கள் அனுப்பும் பணத்தை கையாள்வது நான் என கூறுவதை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன். தற்போது வடக்கு மக்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களது உறவினர்கள் அனுப்பும் பணத்தை கொண்டே ஜீவிக்கின்றனர்.

தற்போதைய நிலையில் மேலும் ஆறு மாதகாலம் வழங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்று சேராது.

நான் சிங்கள மக்களை வைராக்கியதோடு நோக்குவதில்லை. இந்த முறை பொதுத் தேர்தலில் ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவது நிச்சயம். இதனை ஒரு சவாலாக கூறி வைக்கின்றேன்” என்றார்.


#JAFFNA_NEWS  #Today_Jaffna_News  #Jaffna_news  #tamil_jaffna_news  #Tamil_news  #todayjaffna  #Vanni_news  #Vavuniya_News  #யாழ்ப்பாணம்  #Batticaloa_Kilinochchi_News

No comments:

Post a Comment