யாழ்.மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய 2 வயது குழந்தையின் உயிரிழப்பு!

 சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த குழந்தை இன்று (29) மதியம் கிணற்றில் விழுந்துள்ளது.


இந்நிலையில், குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  நேற்று இரவு உயிரிழந்துள்ளது.
No comments:

Post a Comment