மாணவர்களுக்கு இடையில் தீவிரமடையும் கோவிட் - மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

 பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.


வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்பட்டது நல்ல விடயம் என்ற போதிலும் மாணவர்கள் மத்தியில் வைரஸ் பரவுவது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


நாட்டில் நாளாந்தம் தொடர்ச்சியாக 700 இற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்கும் வாய்ப்பை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News