வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்

 வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொளற்றாளர்களுடன் தொடர்புடைய மற்றும் எழுமாறாக சில பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


அந்தவகையில், வவுனியா, தாதியர் கல்லூரியில் இன்று (17.11) முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதேவேளை, கோவிட் அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 
No comments:

Post a Comment