மகிழ்ச்சியின் உச்சத்தில் நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சிவாஜிலிங்கம்!

 தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.


மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால் எம்.கே.சிவாஜிலிங்கமம் உள்ளிட்ட பலருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.


இந்த தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்த நிலையில், தடைக்கு எதிரான மனுவை கிளிநொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்த நிலையில் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், வழக்கின் பின்னர் நீதிமன்ற வாயிலில் நின்றவர்களிற்கு கேக் வழங்கினார்.  Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

COPYRIGHT @2021 www.todayyarl.com