நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கோவிட் தொற்று உறுதி

 தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு(Mano Ganeshan) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன்,  விரைவில் தான் நலமுடன் திரும்புவேன் என நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:

Post a Comment