கொரோனா தொற்றுக்குள்ளான சிவசங்கர் மாஸ்டர்!! -கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் !

 கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகி வைத்தியசாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சிவசங்கர் மாஸ்டருக்கு பிரபல நடிகர் உதவி செய்து உள்ளார். 


இந்திய சினிமா உலகில் நடிகர் மற்றும் நடன இயக்குனராக திகழும் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அண்மையில் இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. 


இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. 


இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News