வீரக்கெட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றைய 28 ம் திகதி மாலை அம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெபோக்காவ கிழக்கு மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33, 29 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தெபோக்காவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி, கைக்குண்டு என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான நபரிடம் முன்னெடுக்கபட்ட விசாரணைகளை அடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பவையும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments