நமீதா மாரிமுத்து வெளியேறியது ஏன் ! பிக் பாஸ் பிரபலததை நேரில் சந்தித்த சுருதி !

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுருதி பெரியசாமி மற்றொரு பிக் பாஸ் பிரபலத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


முன்னதாக திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்துவை சந்தித்து எடுத்துக் கொண்ட வீடியோ தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கினார் சுருதி பெரியசாமி.


பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்பட்டது நியாயமான எவிக்‌ஷன் இல்லை என்றும் பேட்டிகளில் கூறியுள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நாடியா சங், அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு எல்லாம் ரீயூனியன் கலாசாரத்தை இந்த சீசனில் ஆரம்பித்து வைக்காத நிலையில், அந்த வேலையை சிறப்பாக செய்து வருகிறார் மாடல் அழகியான சுருதி பெரியசாமி.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுருதி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறிய நமீதா மாரிமுத்துவை சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் படு வைரலானது. அதில், சுருதி நமீதாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து தனது பாசத்தை வெளிக்காட்டி உள்ளார்.


இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் மதுமிதாவுடன் சுருதி ரீயூனியன் நடத்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளனர்.


பிரியங்கா சொன்னது போல அவர் வரும் வரை மதுமிதா ஜெர்மனிக்கு கிளம்ப போவதில்லையா? என அந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


பிக்பாஸ் வீட்டில் இருந்து நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சீக்கிரமாக வெளியேறி இருக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து இருவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


சில குசும்புக்கார நெட்டிசன்கள் இந்த வாரம் பாவனி வெளியேறி விடுவார் என்றும் அடுத்து அவருடன் இணைந்து மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் பண்ணுங்க என கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.


பாவனி கடந்த வாரமே குறைந்த வாக்குகளை பெற்று இருந்த நிலையில், இந்த வாரம் தனது காயினையும் பயன்படுத்தாமல் இருப்பதால் ஒருவேளை அவரையும் துரத்தி விடுவார்களோ என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


ஆனால், பாவனி கடைசி வரை இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment