துப்பாக்கி ஏந்திய போலீஸ் நடிகர் சூரியாவுடன் ! உளவுத்துறை தகவல்

 நடிகர் சூர்யாவின் வீட்டில்  துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சூர்யா நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதன்மூலம் நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களும், தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


குறித்த பொலிஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் சூர்யாவின் தரப்பில் இருந்து பாதுகாப்பு கோரி முறைப்பாடு அளிக்கப்படவில்லை எனவும், உளவுத்துறையின் தகவல் படியே பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சூர்யா செல்லும் இடங்களில் அவர் உடன் பயணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
No comments:

Post a Comment