பிக்பாஸ் நிகழ்ச்சியை இவரே தான் தொகுத்து வழங்குவாராம்!

 கடந்த நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே ட்விட்ட ர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.


இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என பல கேள்விகள் எழுந்த நிலையில், கமலின் மகள் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிம்பு அல்லது விஜய் சேதுபதி என பல செய்திகள் உலா வரத்தொடங்கிவிட்டன.


என்னதான், கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதுக்குள் அவர் நலமுடன் திரும்பி வர எதிர்பார்த்ததை விட, அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்கலாம் என எழுந்த கேள்விகளே அதிகம்.


இந்நிலையில், கமல் தற்போது நலமுடன் உடல் நிலை தேறிவருவதாகவும், அவருக்கு மருத்துவர்களின் அறிவுரையின் படி நிகழ்ச்சியை வழி நடத்த விர்ச்சுவலாக தொகுத்து வழங்கமுடியும் எனக்கூறியுள்ளனர்.


எனவே இதனால், கமலஹாசனை வைத்தே நிகழ்ச்சியை நடத்த பிக்பாஸ் திட்டம் தீட்டி இருக்கிறது. மேலும், அதற்கான உரிய ஏற்பாடுகளையும் பிக்பாஸ் டீம் செய்துவருகிறதாம்..
Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News