முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கடந்த 05 ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை சென்ற மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லையென கணவனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - நாயாறு பகுதியை சார்ந்த 42 வயதுடைய சிவகுமார் ஜெயந்தி எனும் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மேலும், இன்று வரை வீடு திரும்பாத நிலையில் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் தாயை காணாது தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும், பொலிஸாரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும், தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாக கணவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தன்னுடைய மனைவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0765350421 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கணவன் கோரியுள்ளார்.
மேலும், பொலிஸார் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணாது மிகுந்த சோகத்தில் உள்ளதாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
0 Comments