மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுப்பு : தந்தை கைது

  வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12 வயது மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது தந்தையினால் அறுக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.


மேலும், குறித்த நபர் கை மற்றும் கால்களில், பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்  தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெட்டப்பட்ட வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
No comments:

Post a Comment