வித்தியாசமான நிறை கொண்ட எரிவாயு சிலிண்டருக்குள் மர்ம பொருள்? - அதிர்ச்சித் தகவல்

 சாதாரண வெற்று சிலிண்டர் ஒன்று காணப்பட வேண்டிய நிறையை விடவும் 2.5 கிலோ கிராம் அதிக நிறையுடைய வெற்று சிலிண்டர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த எரிவாயு விற்பனையாளர் அதனை பரிசோதனையிட்டுள்ளார்.


“இந்த சிலிண்டர் 12.5 கிலோ கிராம் எரிவாயுவுடன் வருகிறது. காலியான சிலிண்டர் 12.2 கிலோ கிராம் எடை கொண்டது. எரிவாயு கொண்ட முழுமையான சிலிண்டர் 24.7 கிலோ கிராம் காணப்படும்.


எனினும் தற்போது கையில் உள்ள சிலிண்டரை அசைத்து பார்க்கும் போது ஏதோ ஒரு பொருள் உள்ளே இருப்பது போன்று சத்தம் கேட்டுகின்றது. இதனை அழுத்தி பார்க்கும் போது அதில் எரிவாயு இல்லை. எனினும் மேலதிக 2.5 கிலோ கிராம் எடை காணப்பட்டது.


அதனை மறுபக்கம் திருப்பி அழுத்தும் போது கறுப்பு நிறத்தில் திரவம் போன்று வெளியேறியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, தனது வீட்டில் எரிவாயு சிலிண்டரில் கசிவு உள்ளதென தல்பிட்டிய தழுவ நிர்மலபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


உடனடியாக அவரது சிலிண்டரை சோதனையிட்ட போது அதில் இருந்து ஏதா ஒரு பொருள் கசிவதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.


இந்த நிலையில் எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக பரிசோதிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 




Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News