விசேட கலந்துரையாடலின் போது இருவரை அதிரடியாக வெளியேற்றிய ஜனாதிபதி

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உர நிறுவனங்களின் தலைவர்கள் இருவரை கூட்டத்திலிருந்து ஜனாதிபதி வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான உரத்தின் அளவு குறித்து வினவியபோது, ​​அந்தத் தகவல்கள் அவர்களிடம் இல்லாததால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


கூட்டத்தில் இருந்து வெளியேறி இது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். இதனையடுத்து, அவர்கள் கலந்துரையாடலில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  
No comments:

Post a Comment