உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெறவைப்பதாக கூறி 17 வயது சிறுமியை சீரழித்த நபர் !

 ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரை அடுத்த மரவபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(30). இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். லோகநாதன் அந்தியூர் பேருந்து நிலையம்  அருகே டுட்டோரியல் காலேஜ் நடத்தி வருகிறார். இவரது காலேஜில் 10ம் வகுபபு தேர்வில் தோல்வி அடைந்த  மாணவி ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் படித்து வருகிறார்.


ஈரோட்டில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி  17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டுடோரியல் கல்லூரி நிறுவனர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கோவை, கரூரில் ஆசிரியர் கொடுத்த பாலியல் சீண்டல் காரணமாக அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டுடோரியல் கல்லூரி நிறுவனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரை அடுத்த மரவபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(30). இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். லோகநாதன் அந்தியூர் பேருந்து நிலையம்  அருகே டுட்டோரியல் காலேஜ் நடத்தி வருகிறார். இவரது காலேஜில் 10ம் வகுபபு தேர்வில் தோல்வி அடைந்த  மாணவி ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் படித்து வருகிறார். இந்நிலையில்,  மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மாணவியை பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு  நடத்திய பரிசோதனையில் மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்  மகளிடம் இதற்கு காரணம் யார் என்று கேட்டனர். 

அப்போது, கதறியபடியே  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆசிரியர்  லோகநாதன் என்றும் கர்ப்பத்திற்கு  அவரே காரணம் என்றும் மாணவி கூறினார். இதனையடுத்து,  பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் செய்தனர். இதன்பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கர்ப்பமாக்கிய லோகநாதனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் படித்த 18 வயது மாணவியை திருமணம் செய்தவர் லோகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

COPYRIGHT @2021 www.todayyarl.com