5 நிமிடங்கள் சினிமா பார்த்த மாணவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

 தென் கொரியா சினிமாவை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக வடகொரியாவில் 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தென் கொரியா சினிமாவான ‘தி அங்கிள்’ படத்தை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக யாங்காங் மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த சிறுவன் ஹைசன் சிட்டியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கூடத்தில் அந்த மாணவர் சினிமாவை பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.


தென் கொரியா திரைப்படங்கள், பதிவுகள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாகப் பார்த்த, அல்லது வைத்திருப்பவர்களுக்கு ' ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News