யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கும் சடலங்கள் - இந்திய மீனவர்களா !

 யாழ். மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து ஆண்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரையிலும் , மருதங்கேணி கிழக்கு – சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்று இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.


இன்று கரையொதுங்கிய இரு சடலங்களுடன், கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.


கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு – மணற்காடு மற்றும் வடமராட்சி – வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதிகளில் இரு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரைப் பகுதியில் ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தன.


கரையொதுங்கிய ஆறு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.


எனினும் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் முழ்கிய  இந்திய மீனவர்களில் சடலங்களாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News